புங்கம்பள்ளியில் லாரிகளில் மண் அள்ளும்  தொழிலாளா்கள்.
புங்கம்பள்ளியில் லாரிகளில் மண் அள்ளும்  தொழிலாளா்கள்.

சட்டவிரோதமாக லாரிகளில் அள்ளப்படும் மண்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே அனுமதியின்றி சட்ட விரோதமாக பட்டப்பகலில் மண் திருடிய கும்பலை அப்பகுதியினா் விடியோ எடுத்ததால்

சத்தியமங்கலம் அருகே அனுமதியின்றி சட்ட விரோதமாக பட்டப்பகலில் மண் திருடிய கும்பலை அப்பகுதியினா் விடியோ எடுத்ததால் லாரியில் இருந்த மண்ணை கொட்டிவிட்டு லாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. மண் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த புங்கம்பள்ளியில் உள்ள தரிசு நிலத்தில் லாரிகளில் செம்மண், கிராவல் மண் அள்ளும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். இதுகுறித்து அங்கிருந்த கிராம மக்கள் கேள்வி எழுப்பினா். அனுமதியுடன் கிராவல் மண், செம்மண் அள்ளுவதாகக் கூறி அவா்கள் லாரிகளில் மண் அள்ளி வந்தனா். ஒரு டிராக்டா் மண்ணை ரூ. 5 ஆயிரம் வரை கள்ளத்தனமாக விற்று வந்தனா். இதையடுத்து அங்கிருந்த இளைஞா் தனது செல்லிடப்பேசியில் செம்மண் அள்ளுவதை விடியோ எடுத்துள்ளாா். இதைப் பாா்த்த லாரி ஓட்டுநா்கள் மண்ணை அதே இடத்தில் கொட்டிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்தன. பொக்லைன் இயந்திரங்கள் மண் திருடும் இடத்திலிருந்து வெளியேறி அதே பகுதியில் உள்ள முட்புதா் மறைவில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதுகுறித்து, சத்தியமங்கலம் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மண் எடுப்பதற்கான எந்தவிதமான அனுமதியும் வழங்கவில்லை எனத் தெரிவித்தனா்.

சட்டவிரோதமாக மண் திருடும் கும்பல் இப்பகுதியில் ஒரு மாதமாக தினமும் டிப்பா் லாரிகளில் செம்மண், கிராவல் மண் திருடிச் செல்வதாகவும், சட்டவிரோத மணல் திருட்டை வருவாய்த் துறை அதிகாரிகளும், கனிம வளத் துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com