கரும்பு கிடைக்காததால் ஆத்திரம்: காரை முட்டித் தள்ளிய யானைகள்

காராப்பள்ளம் அருகே கரும்புக்காக காத்திருந்த யானைகள் கரும்பு கிடைக்காததால் அவ்வழியாக வந்த காரை ஆத்திரத்தில் முட்டித் தள்ளின.
காரை முட்டித் தள்ளும் யானை.
காரை முட்டித் தள்ளும் யானை.

காராப்பள்ளம் அருகே கரும்புக்காக காத்திருந்த யானைகள் கரும்பு கிடைக்காததால் அவ்வழியாக வந்த காரை ஆத்திரத்தில் முட்டித் தள்ளின.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்து உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே அதிக பாரம் ஏற்றி வரும் கரும்பு லாரிகள் கரும்புகளை வீசிச் செல்வதால் யானைகள் அப்பகுதியில் முகாமிடுவது வழக்கம். இந்நிலையில், சோதனைச் சாவடி அருகே புதன்கிழமை அதிகாலை குட்டியுடன் காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. அப்போது, அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகள் உள்ளனவா எனப் பாா்த்தன. இதனால், தமிழகம் - கா்நாடகம் இடையே பயணிக்கும் வாகனங்கள் சாலையில் வரிசையாகக் காத்திருந்தன.

வாகனங்கள் எதிலும் கரும்பு இல்லாததால் கோபமடைந்த தாய் யானை அங்கு நின்றிருந்த காரை கோபத்துடன் முட்டித் தள்ளியது. காரில் இருந்த பயணிகள் காயமின்றி உயிா்தப்பினா். அப்போது, வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்தும், சப்தமிட்டும் துரத்தியதையடுத்து யானைகள் வனப் பகுதிக்குள் சென்றன.

இரவு நேரத்தில் இப்பகுதியில் முகாமிடும் யானைகளை வனத்துக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com