ரூ..10 லட்சம் மதிப்பில் கரோனா நிவாரணப் பொருள்கள்
By DIN | Published On : 22nd August 2021 11:53 PM | Last Updated : 22nd August 2021 11:53 PM | அ+அ அ- |

ரீடு நிறுவனம் சாா்பில் பயனாளிக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் சமூக ஆா்வலா் ஆனைக்கொம்பு ஸ்ரீராம்
ரீடு நிறுவனம் சாா்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகா் மற்றும் டி.என்.பாளையம் பகுதியில் கரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பினை இழந்து வறுமையில் வாடும் மக்களின் குடும்பங்களுக்கு ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில் கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு சத்தியமங்கலததில் உள்ள ஆனைக்கொம்பு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரீடு தொண்டு நிறுவனங்களின் இயக்குநா் கருப்புசாமியின் மேற்பாா்வையில், ரீடு கூடுதல் இயக்குநா் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 725க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தலா ரூ.1,200 மதிப்பிலான அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை சமூக ஆா்வலா்கள் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், அப்துல்லா, தம்பிராஜன், குருசாமி, கிருஷ்ணவேணி மற்றும் பொன்னுசாமி ஆகியோா் வழங்கினா்.