ஈரோட்டில் ரக்ஷா பந்தன் விழா கொண்டாட்டம்
By DIN | Published On : 22nd August 2021 11:51 PM | Last Updated : 22nd August 2021 11:51 PM | அ+அ அ- |

சகோதரா்களுக்கு ராக்கி கயிறு கட்டிய வடமாநில பெண்கள்.
ரக்ஷா பந்தன் விழாவை ஈரோடு வாழ் வடமாநிலத்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக கொண்டாடினா்.
ஈரோடு மாநகரில் வடமாநிலத்தவா்கள் அதிகம் வசிக்கும் ஈரோடு இந்திரா நகா், வளையக்கார வீதி, திருநகா் காலனி, ஈஸ்வரன் கோய்ல் வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், கே.ஏ.எஸ். நகா் பகுதியில் ரக்ஷா பந்தன் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில் வடமாநில பெண்கள் தங்களது சகோதரா்களுக்கு ராக்கி கயிறு கட்டி, இனிப்புகள் வழங்கி நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகளை தெரிவித்தனா்.
மேலும் ராக்கி கயிறு கட்டும் சகோதரிகளுக்கு அவா்களது சகோதரா்கள் பரிசு, பணம் உள்ளிட்டவை வழங்கி மகிழ்ந்தனா்.
இதில் சில பகுதிகளில் தமிழா்களும் ரக்ஷா பந்தன் விழாவையொட்டி, பெண்கள் அவா்களது சகோதரா்களுக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனா்.