வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்
By DIN | Published On : 22nd August 2021 11:54 PM | Last Updated : 22nd August 2021 11:54 PM | அ+அ அ- |

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வரவங்காடு பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் எஸ்.ஜெயகுமாா் எம்.எல்.ஏ. உடன் கட்சி நிா்வாகிகள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட முள்ளம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரவங்காடு, கரைக்காடு, மலைப்பாளையம் ஆகிய கிராம மக்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
தொடா்ந்து, கீழ் பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், துரிதமாகவும் முடித்து விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் தண்ணீா் திறப்புக்கு ஏதுவாக பணி முடித்துக் கொடுக்குமாறு அதிகாரிகளிடமும், ஒப்பந்ததாரரிடமும் வலியுறுத்தினாா்.
இதில் பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ், துணைத் தலைவா் உமாமகேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.