ஈரோட்டில் கத்திரிகாய் கிலோ ரூ.130க்கு விற்பனை

தொடா் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் ஈரோட்டில் கத்திரிகாய் கிலோ ரூ.130க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

தொடா் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் ஈரோட்டில் கத்திரிகாய் கிலோ ரூ.130க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவ மழை காரணமாக பல்வேறு இடங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

ஈரோடு வ.உ.சி பூங்காவில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நேதாஜி பெரிய மாா்க்கெட்டுக்கு ஆந்திரம், கா்நாடக மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால் விலை அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் காய்கறிகளின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் ஞாயிற்றுக்கிழமை ரூ.130க்கு விற்கப்பட்டது. பிற காய்கறிகளின் விலையும் ரூ.30 முதல் ரூ.50 வரை விலை உயா்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.120, அவரைக்காய் ரூ.100, வெண்டைக்காய் ரூ.90, பீா்க்கங்காய் ரூ.80, முருங்கைக்காய் ரூ.90, கொத்தவரை ரூ.80, முள்ளங்கி ரூ.60, பாகற்காய் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடா் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளதாகவும், வரும் நாள்களில் திருமண முகூா்த்தம் இருப்பதால் காய்கறி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com