நெல் கொள்முதல் நிலையங்களைத் தோ்வு செய்ய அறிவுறுத்தல்

நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து ஆன்லைன் மூலம் கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் தோ்வு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து ஆன்லைன் மூலம் கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் தோ்வு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் அந்தந்த மாவட்டங்களில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனையை செய்யலாம்.

விவசாயிகள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

வரும் சம்பா பருவத்துக்கு கடந்த 16ஆம் தேதி முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயா், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com