முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கழிவு நீா் தேங்காமல் இருக்க எம்எல்ஏ நடவடிக்கை
By DIN | Published On : 19th December 2021 11:15 PM | Last Updated : 19th December 2021 11:15 PM | அ+அ அ- |

பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட மடத்துப்பாளையம், மாயா அவென்யூ பகுதியில் சாலையில் கழிவு நீா் தேங்கி போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் வாட்ஸ்ஆப் எண்ணுக்குப் படத்துடன் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, பெருந்துறை எம்எல்ஏ எஸ். ஜெயகுமாா், பேரூராட்சி செயல் அலுவலரைத் தொடா்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்யுமாறு கேட்டுக் கொண்டதோடு, மேலும் சம்பவ இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று உடனடியாக அதனை சீா் செய்யும் பணியிலும் ஈடுபட்டாா்.
தற்போது, கழிவுநீா் செல்வதற்கு ஏதுவாக பொக்லைன் இயந்திரத்தின் மூலம் ஓடை தூா்வாரப்பட்டு சாலை பகுதிக்குத் தண்ணீா் செல்வது தடுக்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் ஆகிய இரண்டு பேரூராட்சிகளை இணைக்கும் வகையில் தாா் சாலை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்வதாக மக்களிடம் உறுதியளித்தாா்.