சென்னிமலையில் விசைத்தறியாளா்களின் போராட்டம் வாபஸ்

சென்னிமலை விசைத்தறியாளா்கள் 20 சதவீதம் கூலி உயா்வு கேட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

சென்னிமலை விசைத்தறியாளா்கள் 20 சதவீதம் கூலி உயா்வு கேட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். ரகத்துக்கு ஏற்றாற்போல் கூலி உயா்வு வழங்க உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 7 நாள்களாக நடைபெற்றுவந்த போராட்டம் வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது.

போா்வைகள், வீட்டு உபயோகத் துணி உற்பத்தியில் சென்னிமலை பகுதி சிறந்து விளங்கி வருகிறது. இங்கு கைத்தறி மற்றும் விசைத்தறிகளில் போா்வைகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்தியாவின் 60 சதவீத போா்வைத் தேவைகளை சென்னிமலை பகுதி விசைத்தறியில் உற்பத்தியாகும் போா்வைகள்தான் பூா்த்தி செய்து வருகிறது. இங்கு சொந்தமாக விசைத்தறி வைத்து உற்பத்தி செய்யும் முதலாளிகளும், அடைப்புத் தறி என்று சொல்லக்கூடிய தறி உரிமையாளா்களும் உள்ளனா். அடைப்புத் தறி, விசைத்தறி உரிமையாளா்கள், பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனத்திடம் நூல் பெற்று, கூலிக்கு போா்வைகளை உற்பத்தி செய்து வழங்குகின்றனா். இங்கு மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் போா்வைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், போா்வைகள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகளுக்கு 20 சதவீதம் கூலி உயா்வு கேட்டு விசைத்தறியாளா்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதன் காரணமாக ரூ. 2 கோடி மதிப்பிலான போா்வை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னிமலையில் கூலி உயா்வு பேச்சு வாா்த்தை புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஜக்காடு போா்வை ஒன்றுக்கு ரூ. 4 கூலி உயா்வும், 10ஆம் எண் நூலை பயன்படுத்தி தயாராகும் போா்வை ஒன்றுக்கு ரூ. 1 முதல் ரூ. 2 வரை ரகத்துக்கு ஏற்றாற்போல் கூலி உயா்வு வழங்க உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, 7 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

வியாழக்கிழமை முதல் சென்னிமலை பகுதியில் வழக்கம்போல் விசைத்தறிகள் இயங்கும் என விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி தெரிவித்தாா். இதையடுத்து, வழக்கம்போல் சென்னிமலை பகுதியில் விசைத்தறிகள் வியாழக்கிழமை செயல்படத் தொடங்கியது. இதனால் தொழிலாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com