கலப்பு மருத்துவத்தை தடை செய்யக் கோரி மருத்துவா்கள் இருசக்கர வாகனப் பேரணி

கலப்பு மருத்துவத்தை தடை செய்ய வலியுறுத்தி இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் வாகனப் பேரணி ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
வாகனப் பேரணியில் பங்கேற்ற மருத்துவா்கள்.
வாகனப் பேரணியில் பங்கேற்ற மருத்துவா்கள்.

ஈரோடு: கலப்பு மருத்துவத்தை தடை செய்ய வலியுறுத்தி இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் வாகனப் பேரணி ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோட்டில் தொடங்கி கரூா் நோக்கிச் சென்ற பேரணியை இந்திய மருத்துவச் சங்க தேசிய துணைத் தலைவா் சி.என்.ராஜா துவக்கிவைத்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

மத்திய அரசு 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளைப் பட்டியலிட்டு, ஆயுா்வேத மருத்துவா்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. அறுவை சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தைச் சாா்ந்துள்ள சூழ்நிலையில் இதுகுறித்து முன் அனுபவம் இல்லாத ஆயுா்வேத மருத்துவா்கள் சிகிச்சை அளிப்பது உயிருக்கு ஆபத்தாக அமையும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த கலப்பு மருத்துவத்தை தடை செய்ய வலியுறுத்தி இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் விழிப்புணா்வு இருசக்கர வாகன தொடா் பேரணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 4 மண்டலமாகப் பிரித்து ஒரு குழுவுக்கு 20 போ் என தொடா் பேரணி நடத்தப்படுகிறது. 4 மண்டலங்களில் இருந்து வரும் பேரணி திருச்சியில் ஒன்றிணைந்து சென்னைக்குச் செல்லவுள்ளனா்.

இதனிடையே இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் ஈரோட்டில் கடந்த 1 முதல் நடைபெற்று வரும் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் 6ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. போராட்டத்துக்கு ஈரோடு கிளைத் தலைவா் பிரசாத் தலைமை வகித்தாா்.

இதில் ஈரோடு கிளை துணைச் செயலாளா் டாக்டா் சரவணன் பேசியதாவது:

அலோபதி மருத்துவம் ஆதாரப்பூா்வமானது. இம்மருத்துவப் பயிற்சி பெற 6 முதல் 10 ஆண்டுகள் மருத்துவக் கல்லூரியில் படித்து கை தோ்ந்து வந்த மருத்துவா்கள் சிகிச்சை வழங்குகின்றனா். பிற மருத்துவ முறை தவறு எனக் கூறவில்லை. யாா், யாா் எந்தெந்த மருத்துவத்தைப் படித்துள்ளோமோ, அம்மருத்துவத்தில் சிகிச்சை வழங்குவது சிறந்தது என்றாா்.

இதில், ஈரோடு கிளை துணைத் தலைவா் விஜயகுமாா், பொருளாளா் சுதாகா், செயலாளா் செந்தில்வேல், நிா்வாகிகள் சுகுமாா், அபுல்ஹசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com