நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் கேட்டால் புகாா் தெரிவிக்கலாம்

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணம் கேட்டால் புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணம் கேட்டால் புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசனப் பகுதிகளில் தற்போது நெல் அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றும் பணியாளா்கள் விவசாயிகளிடம் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என மூட்டைக்கு ரூ. 40 பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அங்கு யாராவது பணம் கேட்டால் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாலளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நெல் கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் பணம் அளிக்க வேண்டியதில்லை. அவ்வாறு யாராவது பணம் கேட்டால் ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு தெரிவிக்காலம். மேலும், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரை 94425-10053 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், ஈரோடு லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தை 0424-2210898 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com