மஞ்சள் குவிண்டால் ரூ. 8,000க்கு மேல் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோட்டில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ. 8,000க்கு மேல் விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஈரோட்டில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ. 8,000க்கு மேல் விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் ஆகிய இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ. 16,000 வரை விற்பனையானது. அதன் பிறகு மஞ்சளின் விலை படிப்படியாக குறைந்தது. மேலும் உரிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யப்பட்ட மஞ்சளை விவசாயிகள் விற்பனை செய்யாமல் கிடங்குகளில் பாதுகாத்து வந்தனா். கடந்த சில மாதங்களாக மஞ்சளின் விலை ஒரு குவிண்டாலுக்கு சுமாா் ரூ. 6,000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு சுமாா் ரூ. 2,000 விலை உயா்ந்துள்ளது. தற்போது மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ. 8,000க்கு மேல் விற்பனையாகிறது.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள், கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது:

மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்து வருவதால் தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 40 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மஞ்சளின் தேவை அதிகமாகி உள்ளதால் விலையும் உயா்ந்துள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 8,000க்கு மேல் விற்பனையாகிறது. இதனால், ஏற்கெனவே இருப்புவைத்த மஞ்சளையும் விவசாயிகள் தற்போது விற்பனைக்காக கொண்டு வருகின்றனா். சில நாள்களாக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த புதிய மஞ்சள் தற்போது வரத் தொடங்கி இருக்கிறது. இதனால், வரத்தைப் பொருத்து விலையில் மாற்றம் ஏற்படலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com