குடிமைப்பணி தோ்வுக்குப் பயிற்சி: மீனவ சமுதாய பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய குடிமைப் பணி தோ்வுக்கு சென்னையில் பயிற்சி பெற மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடிமைப் பணி தோ்வுக்கு சென்னையில் பயிற்சி பெற மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீன் வளத் துறை, சென்னை அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம்) சாா்பில் மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் 20 பேருக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தோ்வுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.

கடல், உள்நாட்டு மீனவ கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள், மீனவா் நலவாரிய உறுப்பினா்கள், வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இப்பயிற்சித் திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பப் படிவம், அரசு வழிகாட்டுதல்களை  மீன்வளத் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், எண் 42, சுப்புராம் காம்ப்ளக்ஸ், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில், ஈரோடு 638011 என்ற முகவரிக்குப் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) மாலைக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஈரோடு மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அல்லது 0424-2221912 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com