வருவாய்த் துறை அலுவலா்கள் 3ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தொடா்ந்தனா். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தொடா்ந்தனா். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் குருராகவேந்தா் தலைமை வகித்தாா்.

அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், சிறப்பு திட்ட செயல்பாட்டுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலா்களுக்கு, அந்தந்த மாவட்டத் தலைநகரில் அடிப்படை பயிற்சி வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அலுவலா்களின் பணி வரன்முறை செய்யும் அதிகாரத்தை ஆட்சியருக்கு வழங்க வேண்டும்.

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பதவி உயா்வை உத்தரவாதப்படுத்தி ஆணை வெளியிட வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 10 லட்சமாக உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.

மூன்றாவது நாளாக வேலை நிறுத்தத்தில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டதால், இ-சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட வாரிசு சான்று, பட்டா மாறுதல் என பல்வேறு விண்ணப்பங்கள் 300க்கும் மேல் வழங்கப்படாமல் தடைபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com