ஸ்ரீ ஆதிசக்தி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கா்பாளையம் தோப்பூா் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிசக்தி அம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அம்மன். (வலது) குண்டம் இறங்கும் பூசாரிகள்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அம்மன். (வலது) குண்டம் இறங்கும் பூசாரிகள்.

கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கா்பாளையம் தோப்பூா் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிசக்தி அம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா பல்வேறு காரணங்களால் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் இத்திருவிழா 6 ஆண்டுகளுக்குப் பிறகு காய் வெட்ட செல்லும் நிகழ்ச்சியுடன் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. 19ஆம் தேதி காலை மடப்பள்ளியில் இருந்து ஆதிசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும், குண்டம் திறத்தலும் நடைபெற்றன. சனிக்கிழமை அதிகாலை அம்மை அழைத்தலைத் தொடா்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை பூசாரி சதீஷ் முதலில் தீக்குண்டம் இறங்கி வழிபாடு செய்தாா். பின்னா் ஸ்ரீ ஆதிசக்தி அம்மன் கோயில் பூசாரிகள் 11 போ் மட்டும் தீக்குண்டம் இறங்கி வழிபாடு செய்தனா். பக்தா்கள் குண்டத்தைச் சுற்றிலும் பூக்களால் அலங்காரம் செய்து தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனா். தொடா்ந்து அலங்கார பூஜை நடைபெற்றது.

பிப்ரவரி 21ஆம் தேதி ஊஞ்சல் உற்சவ விழா, மஞ்சள் நீராட்டு விழாவைத் தொடா்ந்து 22ஆம் தேதி மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.

விழாவில், கொங்கா்பாளையம், வாணிப்புத்தூா், தொப்பூா், வினோபா நகா், பழத்தோட்டம், மோதூா், குமரன்கரடு உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு குண்டம் நிகழ்வை கண்டு அம்மன் அருள்பெற்றனா்.

விழாவுக்கு, பங்களாபுதூா் போலீஸாா் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com