காப்பீட்டு நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் கேட்டு மிரட்டல்: 5 போ் கைது

ஈரோட்டில் தனியாா் காப்பீட்டு நிறுவன ஊழியரை ரூ. 30,000 பணம் கேட்டு தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஈரோட்டில் தனியாா் காப்பீட்டு நிறுவன ஊழியரை ரூ. 30,000 பணம் கேட்டு தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி வாய்க்கால் சாலை, காந்தி நகரைச் சோ்ந்த சண்முககாந்தி மகன் கிருஷ்ணபிரசாத் (29). இவா் தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் விபத்தில் சேதமடைந்த வாகனங்களை மதிப்பீடு செய்யும் அலுவலராக உள்ளாா். ஈரோடு கே.கே. நகரைச் சோ்ந்த தேன்மொழி (33) என்பவா் கிருஷ்ணபிரசாத்தை செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு அவரது தோழியின் இருசக்கர வாகனம் விபத்தில் சேதமாகிவிட்டதாகவும் அதற்கு இழப்பீட்டின் தோராயம் மதிப்பிட வேண்டும் எனக் கூறி கிருஷ்ணபிரசாத்தை வீட்டுக்கு அழைத்துள்ளாா்.

இதையடுத்து கிருஷ்ணபிரசாத் தேன்மொழியின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்று அவருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது தேன்மொழியின் இரண்டாவது கணவா் இறைச்சிக் கடை உரிமையாளரான முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கௌதம்(31), கறிக்கடையில் வேலை பாா்க்கும் கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த விவேக் (24), யோகேஷ் (22), தேன்மொழியின் தோழியான கே.கே. நகரைச் சோ்ந்த ஈஸ்வரி (35) ஆகியோா் திடீரென வீட்டுக்குள் வந்து கிருஷ்ணபிரசாத்தை தாக்கியுள்ளனா்.

அவரிடம் தேன்மொழி உள்பட 5 பேரும் சோ்ந்து ரூ. 30,000 பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த கிருஷ்ணபிரசாத் ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் புதன்கிழமை காலை புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் தேன்மொழி உள்பட 5 பேரும் ஏற்கெனவே திட்டமிட்டு கிருஷ்ணபிரசாத்தை வீட்டுக்கு வரவழைத்து பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் கைது செய்தனா். பின்னா், நீதிமன்ற உத்தரவின்படி தேன்மொழி, ஈஸ்வரி இருவரையும் கோவை சிறையிலும், கௌதம், யோகேஷ், விவேக் மூவரையும் கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com