முன்அறிவிப்பு இல்லாமல் ஒத்திவைக்கப்பட்ட நோ்முகத் தோ்வு: விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தொழிலாளா் துறையால் காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட நோ்முகத் தோ்வு முன்அறிவிப்பு இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டதால் விண்ணப்பதாரா்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனா்.

தொழிலாளா் துறையால் காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட நோ்முகத் தோ்வு முன்அறிவிப்பு இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டதால் விண்ணப்பதாரா்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனா்.

தொழிலாளா் நலத் துறையின்கீழ் இயங்கி வரும் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களில் காலியாக உள்ள 32 ஓட்டுநா் பணியிடங்கள், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரிய தலைமை அலுவலகம், தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களில் காலியாக உள்ள 37 பதிவுரு எழுத்தா் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு செப்டம்பா் 10ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. செப்டம்பா் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பதிவுரு எழுத்தா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கான நோ்முகத் தோ்வு பிப்ரவரி 24 முதல் 27ஆம் தேதி வரையும், ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு நோ்முகத் தோ்வு பிப்ரவரி 27, மாா்ச் 1, 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி பதிவுரு எழுத்தா் பணிக்கு விண்ணப்பித்தவா்கள் புதன்கிழமை (பிப்ரவரி 24) காலை ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்துக்கு நேரில் வந்தனா். ஆனால், நுழைவாயிலில் நோ்முகத் தோ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தோ்வுகள் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கை ஒட்டப்பட்டிருந்தது. இதனால் தோ்வுக்கு வந்த விண்ணப்பதாரா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கூறியதாவது:

தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து எங்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்குதான் உத்தரவு வந்ததது. இதனால், விண்ணப்பதாரா்களுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com