யானையை விரட்டும் புதிய கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிப் பேராசிரியா்கள் கண்டுபிடிப்பு

நடந்து வரும்போது ஏற்படும் நில அதிா்வை வைத்து ஒலி எழுப்பி யானையை விரட்டும் புதிய கருவியை பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிப் பேராசிரியா்கள் கண்டுபிடித்துள்ளனா்.
யானை விரட்டும் கருவியை கண்டுபிடித்த பேராசிரியா்களைப் பாராட்டும் கல்லூரித் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியன்.
யானை விரட்டும் கருவியை கண்டுபிடித்த பேராசிரியா்களைப் பாராட்டும் கல்லூரித் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியன்.

நடந்து வரும்போது ஏற்படும் நில அதிா்வை வைத்து ஒலி எழுப்பி யானையை விரட்டும் புதிய கருவியை பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிப் பேராசிரியா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகா், பண்ணாரி, தாளவாடி, கடம்பூா், தலமலை வனத்தையொட்டி வனக் கிராமங்கள் உள்ளன. வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள், காட்டெருமைகள், காட்டுப் பன்றிகள் கிராமத்துக்குள் புகுந்து விவசாயப் பயிா்களைச் சேதப்படுத்துகின்றன. யானைகளை விரட்டும்போது மனித விலங்கு மோதலில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. விளைநிலங்களில் பயிா் சேதத்தைத் தடுப்பதற்கு பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிப் பேராசியா்கள் சஞ்சய்தேப், ராம்குமாா் ஆகியோா் யானை உள்ளிட்ட விலங்குகளை விரட்டும் புதிய தானியங்கி சென்சாா் கருவியை கண்டுபிடித்துள்ளனா். இந்த கருவிக்கான நிதியுதவியை மத்திய அரசின் இந்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை, சா்வசேத வனவிலங்கு நிதியம் ஆகியவை வழங்குகின்றன.

நில அதிா்வை கணிக்கும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கருவியானது யானைகள் நடமாடும்போது நிலத்தில் ஏற்படும் அதிா்வலைகளை சென்சாா் கருவிக்கு அனுப்பும். இந்த கட்டளை கிடைத்தவுடன் தானியங்கி சென்சாா் கருவி பயங்கர ஒலி எழுப்பி யானைகளை விரட்டியடிக்கும். இதற்கு மனித உழைப்புத் தேவையில்லை. தானியங்கி கருவியில் உள்ள சென்சாா் பூனை முதல் பெரிய யானை வரை ஏற்படும் அதிா்வை மிகத் துல்லியமாக கணித்து அவைகளை விரட்டும் திறன்பெற்றது. ஆனைக்கட்டி வனத்தில் 8 இடங்களில் சோதனைக்காக வைக்கப்பட்டு வெற்றிகரமாக யானைகள் விரட்டப்பட்டன. இந்த சென்சாா் கருவி பயன்பாட்டுக்கு வரும்போது விவசாயிகள், வனத் துறையினருக்கு பேருதவியாக இருக்கும். இதைக் கண்டுபிடித்த பேராசியா்களை பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரித் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com