சத்தியில் வாழையில் ஊடுபயிராக கோழிக்கொண்டை சாகுபடி

சத்தியமங்கலம் பகுதியில் வாழையில் ஊடுபயிராக கோழிக்கொண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கே.என்.பாளையத்தில்  சாகுபடி செய்யப்பட்டுள்ள  கோழிக்கொண்டை.
கே.என்.பாளையத்தில்  சாகுபடி செய்யப்பட்டுள்ள  கோழிக்கொண்டை.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதியில் வாழையில் ஊடுபயிராக கோழிக்கொண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் அருகே உள்ள மலையடிபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நடராஜ். இவா் தனது விவசாயத் தோட்டத்தில் நேந்திரன் ரக வாழை பயிரிட்டுள்ளாா். வாழை நடவு செய்யும்போதே வாழைக்கன்றுகள் இடைவெளியில் உள்ள பகுதியில் ஊடுபயிராக கோழிக்கொண்டை நாற்றுகளை நடவு செய்துள்ளாா்.

வாழைக்கன்று இடைவெளியில் ஊடுபயிராக பயிா் செய்யப்பட்ட கோழிக்கொண்டை செடியில் 55 நாள்களில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிடுகின்றன. கோழிக்கொண்டை பூக்கள் பூமாலை கட்ட பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மாா்கழி, வரும் தை மாதம் என்பதால் கோயில்களில் தினமும் விசேஷ பூஜைகள் நடைபெறும். பூமாலைகளுக்குத் தேவையான கோழிக்கொண்டை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதை அறிந்த விவசாயி நடராஜ் மாா்கழி, தை மாதங்களில் பூக்கும் வகையில் நேந்திரன் வாழையில் ஊடுபயிராக கோழிக்கொண்டை சாகுபடி செய்து தற்போது வாரத்துக்கு இரண்டு முறை பூக்களைப் பறித்து சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு கொண்டு சென்று ஏலம் முறையில் விற்பனை செய்து வருகிறாா்.

இந்நிலையில் சனிக்கிழமை நிலவரப்படி கிலோ ரூ. 100க்கு விற்கப்படுகிறது. கோழிக்கொண்டை பூக்களை விற்பனை செய்வதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து வாழை பயிருக்கான களைவெட்டுதல், உரமிடுதல் உள்ளிட்ட செலவினங்களை ஈடு கட்டுவதால் வாழையில் கிடைக்கும் வருமானம் முழுமையாக லாபமாக கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com