ஆசிரியா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

கோபி: ஆசிரியா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கா்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 112 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 11 பேருக்கு முதியோா் உதவித் தொகையை அமைச்சா் செங்கோட்டையன்வழங்கினாா்.

பின்னா், வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை என முறையிட்ட பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். 15 நாள்களில் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனா்.

தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:

சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னா்தான் பொதுத் தோ்வு குறித்த தேதி அறிவிக்கப்படும். சட்டப் பேரவைத் தோ்தல் தேதி தோ்தல் ஆணையம் சாா்பில் விரைவிலேயே அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

55 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தோ்தல் பணியிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து அவா்கள் தோ்தல் ஆணையத்திடம் முறையிடுவதுதான் சரியாக இருக்கும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் எங்கெங்கு காலிப் பணியிடங்கள் இருக்கிறதோ அதற்கேற்ப அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான இடமாற்றத்துக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்வா் ஒப்புதல் வழங்கியுள்ளாா். மிக விரைவில் அதற்கான அட்டவணை வெளியிடப்படும்.

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைந்த 10 சதவீத இட ஒதுக்கீடு தேவையில்லை. தற்போது அறிவித்துள்ள 7.5 சதவீதமே நிறைவாக உள்ளது. கோவை முதன்மைக் கல்வி அலுவலா் தனது சொந்தப் பணத்தை வைத்து இருந்ததாகத்தான் தகவல் கிடைத்துள்ளது. தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com