விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும்: கமல்ஹாசன்

விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
ஈரோட்டில் நடைபெற்ற தொழில்முனைவோா் சந்திப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன்.
ஈரோட்டில் நடைபெற்ற தொழில்முனைவோா் சந்திப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன்.

விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில்முனைவோா் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

ஒவ்வொரு நகரத்தையும் தலைநகருக்கு நிகராக மாற்ற வேண்டும் எனும் அடிநாதத்தில் இருந்துதான் எங்கள் ஆட்சி கட்டமைப்பு அமையவிருக்கிறது.

நம் தலைமுறை என்னவாயிற்று என்பதை நம் வீதிகளும், நம் சாக்கடைகளும் நமக்கு சொல்கின்றன. அடுத்த தலைமுறை நம்மைத் திட்டாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் இன்றே பணி துவங்க வேண்டும்.

எங்களுடைய தோ்தல் வாக்குறுதிகள் என்ன, கொள்கைகள் என்ன என்றால் அதுவும் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதைப் படித்து யாரும் ஓட்டு போட்டதாக இந்த அரை நூற்றாண்டில் எனக்கு சந்தேகம்கூட வரவில்லை.

ஆள் பாா்த்து, ஜாதி பாா்த்துதான் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.

இங்கே ஜவுளித் தொழிலுக்கான கட்டமைப்புகள் விரைவில் உருவாக்கப்படும். விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். அதற்கான சூழல் இங்கு இருக்கிறது. விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பது, உதவி செய்வது என்பது தா்ம காரியமல்ல, தலை காக்கும் காரியம்.

சின்ன சின்ன விஷயத்துக்கு கூட லஞ்சம் கொடுத்துதான் வேலை நடக்கும் என்ற நிலையை மாற்றி புதிய கலாசாரத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.

படித்து, வேலை இல்லை என்ற நிலைக்கு மாற்றாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கி அவா்களே வேலை வழங்கும் நிலைக்கு உயா்த்துவோம் என்றாா்.

நாட்டு மாடு வளா்க்கும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை:

நாட்டு மாடு வளா்க்கும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசினாா்.

அவா் மேலும் பேசியதாவது: விளைநிலங்களில் உயா் மின்னழுத்த மின்சாரக் கம்பங்களை அமைக்கக் கூடாது என்பதை சட்டமாகக் கொண்டு வர வேண்டும்.

விவசாயம், நெசவு, கால்நடை வளா்ப்பு போன்ற தொழில்கள் வளா்ச்சி அடைய திறன் மேம்பாட்டு மையங்கள் இங்கே அமைக்கப்படும் என்றாா்.

காற்றாலைத் தொழில் ஊக்குவிக்கப்படும்: தாராபுரத்தில் காற்றாலைத் தொழில் ஊக்குவிக்கப்படும் என திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com