சென்னிமலையில் கிராம கண்காணிப்பு காவலா் நியமனம்

சென்னிமலை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் கிராம கண்காணிப்பு காவலா் என்ற அமைப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ்.

விழாவுக்கு, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமை வகித்து, கிராம கண்காணிப்பு காவலா் அமைப்பைத் தொடங்கிவைத்துப் பேசினாா். சென்னிமலை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க 6 கிராமங்களுக்கு ஒரு காவலா் என்ற வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில், சென்னிமலை காவல் ஆய்வாளா் (பொ) சண்முகம், உதவி ஆய்வாளா்கள் தமிழ்செல்வன், ரவிசந்திரன், துரைசாமி, மேகநாதன், ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com