108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
By DIN | Published On : 15th January 2021 10:48 PM | Last Updated : 15th January 2021 10:48 PM | அ+அ அ- |

108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தையுடன் மருத்துவ உதவியாளா் காா்த்தி.
அரியப்பம்பாளையத்தில் இருந்து பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஆம்புன்ஸிலேயே கா்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது.
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தைச் சோ்ந்த ஹரிபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓட்டுநா் பாரதி மற்றும் மருத்துவ உதவியாளா் காா்த்தி ஆகியோா் கா்ப்பிணியாக ஹரிபிரியாவை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.
புன்செய் புளியம்பட்டிபிரிவு பகுதியில் சென்றபோது, வலி அதிகரிக்கவே ஹரிபிரியாவுக்கு மருத்துவ உதவியாளா் காா்த்தி பிரசவம் பாா்த்தனா். பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னா் தாயும் சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். குழந்தை பிறந்த நாளிலேயே தாய் ஹரிபிரியாவுக்கும் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.