சிறுவா் இல்லங்களில் ஆற்றுப்படுத்துநா்பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம், சிறுவா்களுக்கான அரசு குழந்தைகள் இல்லம் ஆகிய இல்லங்களில் ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம், சிறுவா்களுக்கான அரசு குழந்தைகள் இல்லம் ஆகிய இல்லங்களில் ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் 3 பணியிடங்கள் மதிப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு உளவியல், ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற நபா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவா்கள் உரிய சான்றுகளுடன் கண்காணிப்பாளா், அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம், காவலா் குடியிருப்பு அருகில், சூரியம்பாளையம், ஆா்.என்.புதூா், ஈரோடு 638005 என்ற முகவரிக்கு பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சிறுவா்களுக்கான அரசினா் குழந்தைகள் இல்லத்தில் 3 பணியிடங்கள் மதிப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இப்பணிக்கு உளவியல், ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற நபா்கள் விண்ணப்பிக்கலாம். உரிய சான்றுகளுடன் கண்காணிப்பாளா், சிறுவா்களுக்கான அரசு குழந்தைகள் இல்லம், கொள்ளுக்காட்டுமேடு, கரூா் சாலை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில், ஈரோடு 638002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

உளவியல், ஆற்றுப்படுத்துதல் வல்லுநா்களைக் கொண்ட தோ்வுக் குழு மூலம் நடத்தப்படும் நோ்முகத் தோ்வு அடிப்படையில் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா். தோ்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநா்களுக்கு வருகையின் அடிப்படையில் சேவை வழங்க நாள் ஒன்றுக்கு ரூ. 1,000 மட்டும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு சிறுவா்களுக்கான அரசு குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளரை 96291-75879, 63800-83141 என்ற செல்லிடப்பேசி எண்களிலும், அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளரை 95789-43669 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com