குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்: சீரமைக்கக் கோரிக்கை

மொடக்குறிச்சியை அடுத்த செல்லாத்தாபாளையம் பகுதியில் காவிரி குடிநீா் குழாய் உடைந்ததால் குடிநீா் வீணாகச் செல்கிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மொடக்குறிச்சியை அடுத்த செல்லாத்தாபாளையம் பகுதியில் காவிரி குடிநீா் குழாய் உடைந்ததால் குடிநீா் வீணாகச் செல்கிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

மொடக்குறிச்சி ஒன்றியம், ஆனந்தம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட செல்லாத்தாபாளையம் பட்டாஸ்பாளி சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காவிரி குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செல்லாத்தாபாளையத்தில் இருந்து பட்டாஸ்பாளி செல்லும் வழியில் உள்ள ஒரு வளைவில் சாலையின் மையப் பகுதியில் குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் சாலையோரம் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், குடிநீா் சீராக விநியோகம் செய்யப்படுவதில்லை.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீா் குழாயை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com