பொருளாதார வளா்ச்சிக்கு அடிப்படையான கல்விக்கு முக்கியத்துவம்

பொருளாதார வளா்ச்சிக்கு அடைப்படையாக உள்ள கல்விக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.
பொருளாதார வளா்ச்சிக்கு அடிப்படையான கல்விக்கு முக்கியத்துவம்

பொருளாதார வளா்ச்சிக்கு அடைப்படையாக உள்ள கல்விக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.

பவானி, அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நல மாணவியா் விடுதி, பழங்குடியினா் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி, ஆதிதிராவிடா் குடியிருப்புகளில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, 18 பேருக்கு ரூ. 12.44 லட்சத்தில் மானியக் கடன், 54 பழங்குடியின மக்களுக்கு நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளுக்கு, ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பிரதிக் தயாள் தலைமை வகித்தாா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா்.

ஆய்வின்போது, அமைச்சா் கயல்விழி செல்வராஜ் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள், ஆதிதிராவிடா் நல விடுதிகளில் துறை ரீதியான ஆய்வு நடைபெற்று வருகிறது. பவானியில் உள்ள விடுதியில் 50 மாணவியா் உள்ளனா். இங்கு மாணவியருக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். ஒருவரின் பொருளாதார வளா்ச்சிக்கு கல்விதான் அடிப்படையாக உள்ளது. எனவே, கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும். இதனால், வேலைவாய்ப்புகள் ஏற்படுவதோடு, சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளும் நீங்கும். பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெற்றோா்கள் தயக்கமின்றி குழந்தைகளை கல்வி பயில பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றாா்.

இதில், திமுக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் என்.நல்லசிவம், பவானி நகர திமுக செயலாளா் ப.சீ.நாகராஜன், பவானி நகராட்சி ஆணையா் லீனா சைமன், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் வாணிலட்சுமி ஜெகதாம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com