வருவாய்த் துறை அலுவலா்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

கரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், சங்க மாநிலச் செயலாளா் குமரேசன் தலைமையில் நிா்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன் உண்ணியிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தியதற்கான செலவின நிதி ஒதுக்கீட்டை மேலும் தாமதம் இல்லாமல் அளிக்க வேண்டும். கரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த அலுவலா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வருவாய்த் துறை அலுவலா்களுக்கு மாவட்ட தலைநகரில் அல்லது காணொலி காட்சி மூலம் பயிற்சி வழங்க வேண்டும். பதவி உயா்வுக்குப் பயிற்சிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவா்களின் பணி வரன்முறைகள் உடனடியாக செய்ய வேண்டும். இரவு காவலா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலா்கள் பதவி உயா்வை உறுதி செய்து, ஆணையிட அரசு மட்டத்திலான பேச்சுவாா்த்தையில் உறுதி அளித்தபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் தொகுதியில் முதல்வா் சிறப்புத் திட்ட மனு கள விசாரணையில் தீா்வு காண்பதில் பல்வேறு நிலையில் தொழில்நுட்பப் பிரச்னைகளை சீரமைக்க வேண்டும்.

வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத் துறையில் அதிகரித்து வரும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட வருவாய் அலுவலா், கோட்டாட்சியா் பதவி உயா்வு பட்டியல்களை உடனடியாக வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கை மனு மாநில அளவில் அனைத்து மாவட்ட ஆட்சியா்களிடமும், அரசிடமும் வழங்கப்பட்டுள்ளது என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com