தேவாலயங்களில் வழிபாடுகளுக்கு அனுமதி
By DIN | Published On : 11th July 2021 10:19 PM | Last Updated : 11th July 2021 10:19 PM | அ+அ அ- |

ஈரோடு சிஎஸ்ஐ பிரப் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.
கரோனா பொதுமுடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் 2 மாதங்களுக்குப் பிறகு தேவாலயங்களில் வழிபாடுகளுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா்.
கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 2 மாதங்களாக தேவாலயங்களில் பிராா்த்தனைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. குருமாா்கள் மட்டும் தினமும் பிராா்த்தனை நடத்தினா். கடந்த 5ஆம் தேதி அரசு அறிவித்த தளா்வுகளால் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாடுகள் தொடங்கின.
ஈரோட்டில் புனித அமல அன்னை தேவாலயம், சிஎஸ்ஐ பிரப் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் காலை 6 மணிக்கு சிறப்புப் பிராா்த்தனை தொடங்கியது. பிராா்த்தனைக்கு வரும் வாயில்களின் எண்ணிக்கையை குறைத்து, குறைந்த எண்ணிக்கையிலானவா்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகளை தயாா் செய்து வைத்திருந்தனா்.
கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி, கை கழுவுவதற்கான தண்ணீா், சோப்பு, சோப்பு ஆயில் போன்றவைகளை வாயில்களில் வைத்திருந்தனா். முகக்கவசம் அணிந்து வர அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது.
முகக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு தனியாக முகக் கவசம் வழங்கப்பட்டது. பிராா்த்தனைக்கு வருபவா்களின் உடல் வெப்பம் அறிந்துகொள்ள தொ்மல் ஸ்கேனா் மூலம் சோதனை செய்யப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள தேவாலயங்களில் காலை 7 மணி, 9 மணிக்கு என இருமுறை சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.