காய்ந்த மூங்கில்களை எடுக்க பழங்குடியினருக்கு அனுமதி அளிக்கக் கோரிக்கை

வனத்தில் காய்ந்துகிடக்கும் மூங்கில்களை எடுத்துக் கொள்ள பழங்குடியினருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வனத்தில் காய்ந்துகிடக்கும் மூங்கில்களை எடுத்துக் கொள்ள பழங்குடியினருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாளவாடி கிழக்கு ஒன்றிய நிா்வாகிகள் கூட்டம் கானக்கரை நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.

சத்தியமங்கலம் வனப் பகுதியில் உள்ள மூங்கில் தூறுகள் முழுவதும் அண்மைக்காலமாக முற்றிலும் காய்ந்து வேரோடு சாய்ந்து வருகின்றன. சத்தியமங்கலம் வனப் பகுதியில் உள்ள பெரும்பாலான மூங்கில் தூறுகள் பூத்துக் காய்த்து கீழே சாய்ந்து விழுகத் துவங்கிவிட்டன. விலை மதிப்புள்ள மூங்கில்கள் மண்ணில் சாய்ந்து கரையானால் அரிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கிறது. காய்ந்த மூங்கிலை வன விலங்குகள் ஏதும் உண்ணாது. பச்சை மூங்கிலை வெட்டிப் பயன்படுத்திக்கொள்ள 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் அனுமதிக்கிறது. ஆகவே இது சட்டத்துக்கு விரோதமானதும் அல்ல. அவ்வப்போது மூங்கிலை வெட்டியிருந்தால் இப்போது மூங்கில் முற்றிலும் அழியாமல் பாதுகாக்கப்பட்டும் இருக்கும்.

ஆகவே, தற்போது சத்தியமங்கல் வனத்தில் காய்ந்து வீணாகிக் கொண்டிருக்கும் மூங்கில்களை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள வனத் துறை அனுமதிக்க வேண்டும் என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com