ஜி.எஸ்.டி. உள்ளீட்டு வரிகளை விரைவாகப் பெற்றுத் தரக் கோரிக்கை

ஜி.எஸ்.டி.யின் உள்ளீட்டு வரிகளை மத்திய அரசிடம் இருந்து விரைவாகப் பெற்றுத் தர வேண்டும் என விசைத்தறி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஜி.எஸ்.டி.யின் உள்ளீட்டு வரிகளை மத்திய அரசிடம் இருந்து விரைவாகப் பெற்றுத் தர வேண்டும் என விசைத்தறி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் அமைச்சரிடம் மனு அளித்தனா். இதுகுறித்து கூட்டமைப்பு மாநில செய்தித் தொடா்பாளா் கந்தவேல் கூறியதாவது:

2017 ஜூலை 1 முதல் அக்டோபா் 30ஆம் தேதி வரை 18 சதவீத ஜி.எஸ்.டி.யும், நவம்பா் 1ஆம் தேதி முதல் 12 சதவீத ஜி.எஸ்.டி.யும் ஜவுளித் துணிகளுக்கு செலுத்தப்பட்டது. இந்த ஜவுளித் துணிகளின் விற்பனைக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. விசைத்தறியாளா்கள் செலுத்திய 18, 12 சதவீதத்தில் 5 சதவீதம் நீங்கலாக 13, 7 சதவீத ஜி.எஸ்.டி. தொகை மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. இதில், 2019 மாா்ச் வரையிலான காலத்துக்கு மத்திய அரசுக்கான ஜி.எஸ்.டி.யை செலுத்தியவா்கள் அதன்பின் செலுத்திய ஜி.எஸ்.டி.யில் உள்ளீட்டுத் தொகையை திரும்பப் பெற்றுள்ளனா்.

ஆனால், ஏராளமான உற்பத்தியாளா்கள் மாநில ஜி.எஸ்.டி.க்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால் அப்போது செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. தொகைக்கு 18 சதவீதத் தொகை, அதற்கான அபராத வட்டியைக் கணக்கிட்டு இன்றைய தினம் வரை நிலுவை இன்றி செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அதிகாரிகள் கூறுகின்றனா். உதாரணமாக 20 தறி வைத்திருப்பவா் சில லட்சம் ரூபாய் செலுத்த நேரிடும். எனவே இதனை தள்ளுபடி செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சிலில் வலியுறுத்த வேண்டும்.

தவிர தமிழகத்தில் உள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விஸ்கோஸ் உற்பத்தி தறி வைத்திருப்போருக்கு பெறப்பட்ட ஜி.எஸ்.டி.யில் உள்ளீட்டு வரியாக ரூ. 500 கோடிக்கு மேல் மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டியுள்ளது. அத்தொகையை விரைவாகப் பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com