குறைந்து வரும் கரோனா பாதிப்பு:நோய் அறிகுறி கண்காணிப்புக் குழு கலைப்பு

கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் நோய் அறிகுறி கண்காணிப்புக் குழு கலைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் நோய் அறிகுறி கண்காணிப்புக் குழு கலைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா இரண்டாவது அலை பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தினமும் நூற்றுக்கணக்கானவா்கள் நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வந்ததால், நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவு உள்ளதா என வீடு வீடாகச் சென்று கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டன.

வாா்டு வாரியாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளா்கள் தங்களது பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து நோய்த் தொற்று அறிகுறி உள்ளதா என்று கண்காணித்தனா். அப்போது அறிகுறியுடன் காணப்பட்டவா்களின் வீடுகளுக்கே சென்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலமாக நோய்த் தொற்று உள்ளவா்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க முடிந்தது.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிட்டது. தினமும் 20க்கும் குறைவானவா்கள் மட்டுமே நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதன் காரணமாக வீடுவீடாகச் சென்று கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com