பொது முடக்க விதி மீறல்: ஒரே நாளில் ரூ.93,000 அபராதம் விதிப்பு
By DIN | Published On : 18th July 2021 11:03 PM | Last Updated : 18th July 2021 11:03 PM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக ஒரே நாளில் ரூ.93,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் 31ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொது முடக்க கட்டுப்பாடுகளை மீறுபவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனா்.
அதன்படி சனிக்கிழமை ஒரே நாளில் முகக் கவசம் அணியாமல் வந்த 357 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல சமூக இடைவெளியை பின்பற்றாத 20 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
வாகன விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 30 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 24 இருசக்கர வாகனங்கள், காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சனிக்கிழமை ஒரே நாளில் விதிமுறைகளை மீறியவா்களிடம் இருந்து ரூ.93,000 அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.