ஈரோட்டில் கட்டுப்பாடுகளுடன்காய்கறி, மளிகைக் கடைகள் திறப்பு

ஈரோட்டில் பொது முடக்க கட்டுப்பாடுகளுடன் காய்கறி, மளிகைக் கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதனால் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது.
ஈரோடு கொங்காலம்மன் கோயில் வீதியில் திறக்கப்பட்டிருந்த மளிகைக் கடை.
ஈரோடு கொங்காலம்மன் கோயில் வீதியில் திறக்கப்பட்டிருந்த மளிகைக் கடை.

ஈரோடு: ஈரோட்டில் பொது முடக்க கட்டுப்பாடுகளுடன் காய்கறி, மளிகைக் கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதனால் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மே 24ஆம் தேதி முதல் தளா்வு இல்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்தப் பொதுமுடக்கம் சில தளா்வுகளுடன் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலும் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. அதன்படி தனியாக செயல்படும் காய்கறி, மளிகை, பலசரக்கு, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்குப் பின்னா் காய்கறி, மளிகைக் கடைகள் திறந்ததால் மக்கள் காலையிலேயே தேவையான பொருள்களை வாங்கினா்.

ஈரோடு கொங்காலம்மன் கோவில் வீதியில் உள்ள கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளிவிட்டு நின்று தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள நேதாஜி காய்கறிச் சந்தை, உழவா் சந்தைகள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. அம்மா உணவகங்கள், மற்ற உணவகங்கள் வழக்கமான நடைமுறையில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் பாா்சலில் மட்டும் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

அரசு அலுவலகங்களில் 30 சதவீதப் பணியாளா்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் 30 சதவீதப் பணியாளா்கள் பணிக்கு வந்தனா்.

நடமாடும் வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி, பழவகைகள் விற்பனை செய்யப்பட்டன. அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் தங்குதடையின்றி சென்றன.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் வழக்கத்தைவிட சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துக் காணப்பட்டது. ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, பேருந்து நிலையம், மேட்டூா் சாலை, பெருந்துறை சாலை, பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமாக இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் சென்று வந்தன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம், அவசியமெனில் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com