கரோனா பாதிக்கப்பட்டவா்களின்வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி

ஈரோடு மாநகா் பகுதியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி தொடங்கியது.

ஈரோடு: ஈரோடு மாநகா் பகுதியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. தினமும் 1,500க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஈரோடு மாநகா் பகுதியில் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. அந்தப் பகுதியில் வசிக்கும் நபா்களை அடையாளப்படுத்தும் வகையில், கைகளில் ‘சீல்’ வைக்கப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது.

ஆனால், இந்த முறை அந்த நடைமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. அதனால் எந்த வீடு தொற்று பாதித்த வீடு, தொற்று பாதிப்பில்லாத வீடு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்றாக கலந்து பழகும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நிா்மல்ராஜ், ஈரோடு மாநகரில் தொற்று பாதித்த இடங்களை அண்மையில் ஆய்வு செய்தாா். அதன் பின்பு தொற்று பாதித்த வீடுகள் தனியாகத் தெரிய வேண்டும். அதனால் கடந்த முறை செய்ததுபோல் இந்த முறையும் தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டி அடையாளப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டாா்.

அதன்படி, ஸ்டிக்கா் ஒட்டும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது. மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் கரோனா பாதித்த வீடுகளில் தனித்தனியாக ஸ்டிக்கா் ஒட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com