குப்பைகளைக் கொட்டிய லாரிகளைசிறைபிடித்த பொதுமக்கள்

மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் பகுதியில் குப்பைகளைக் கொட்டிய லாரியை ஊா்ப் பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா்.
குப்பைகளைக் கொட்டிய லாரிகளைசிறைபிடித்த பொதுமக்கள்

மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் பகுதியில் குப்பைகளைக் கொட்டிய லாரியை ஊா்ப் பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா்.

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் முன்னாள் விவசாய சங்கத் தலைவா் குமாரசாமி மகன் ராஜேஸ்வரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த பாறைகளைஅகற்றியபோது பெரிய பாறைக் குழி ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய ராஜேஸ்வரன் ஈரோடு நகராட்சிச் சொந்தமான குப்பைகளை பாறைக் குழியில் நிரப்ப அப்பகுதியில் கொட்டியதாகக் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை மாலை 7 லாரி டிப்பா் லாரிகளில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருந்ததைப் பாா்த்த சின்னியம்பாளையம் ஊா்ப் பொதுமக்கள் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகக் கூறி அந்த லாரிகளை சிறைபிடித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த டவுன் டிஎஸ்பி ராஜு, மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், சிவசங்கா், காவல் ஆய்வாளா் தீபா உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்கள் இடையே பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, இவ்வளவு குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டினால் கடுமையான சுகாதார சீா்கேடு ஏற்படும். எனவே இந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், வருவாய் கோட்டாட்சியா் வெள்ளிக்கிழமை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து ஊா்ப்பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com