முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஓவியப் போட்டி: பெருந்துறை மாணவி மாநிலத்தில் முதலிடம்
By DIN | Published On : 12th June 2021 05:30 AM | Last Updated : 12th June 2021 05:30 AM | அ+அ அ- |

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் பெருந்துறை மாணவி முதலிடம் பிடித்துள்ளாா்.
பெருந்துறை ஒன்றியம், பெரிய வீரசங்கிலி ஊராட்சியைச் சோா்ந்தவரும், கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை, அறிவியல் கல்லூரி மாணவியுமான வெ.மோகனமதுரா இப்போட்டியில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.
சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா், மாணவிக்கு ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். அப்போது, பெரியவீரசங்கலி ஊராட்சி மன்றத் தலைவா் சிவகுமாா் உடனிருந்தாா்.