ஈரோடு மாவட்டத்தில் 8.21 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 8.21 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 8.21 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரோட்டரி சங்கம் மூலம் 400 படுக்கைகள் கொண்ட கட்டடம் கட்டுமானப் பணி, ஒளிரும் ஈரோடு அமைப்பு மூலம் 200 படுக்கை வசதிகள் கொண்ட கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் சு.முத்துசாமி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8,21,246 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 2.55 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகள் இருப்பவா்கள் தயக்கமின்றி கரோனா சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த மையங்களில் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தவிர வீடுதோறும் தினமும் பரிசோதனை செய்து வரும் களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் கரோனா தொற்றில் இருந்து உடனடியாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே உள்ள நடைமுறைகளான முகக் கவசம், கிருமி நாசினி அல்லது சோப்பு போட்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், வீட்டை விட்டு அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிா்த்தல் ஆகிய நடவடிக்கைகளை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com