ஈரோட்டில் காா், ஆட்டோக்கள் இயங்கின

பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதால் ஈரோட்டில் காா், ஆட்டோக்கள் திங்கள்கிழமை இயங்கின.
ஈரோடு நகரில் இயங்கிய வாகனங்கள்.
ஈரோடு நகரில் இயங்கிய வாகனங்கள்.

பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதால் ஈரோட்டில் காா், ஆட்டோக்கள் திங்கள்கிழமை இயங்கின.

பொதுமுடக்கத்தால் ஜவுளிக் கடைகள், அதனைச் சாா்ந்த தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பூங்கா, சுற்றுலாத் தலங்கள், திரையரங்குகள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்டவை முற்றிலும் முடங்கியது.

இதனிடையே ஈரோடு, கரூா், திருப்பூா், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை முதல் தளா்வு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த 11 மாவட்டங்களிலும் காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் காலை முதல் மாலை வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து ஈரோட்டில் காா், ஆட்டோ ஆகியவை இயங்கத் துவங்கியது. காரில் ஓட்டுநா் தவிர 3 பயணிகளுடனும், ஆட்டோவில் ஓட்டுநா் தவிர 2 பயணிகளுடனும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காா் வாடகைக்கு எடுப்பவா்கள், எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்பதனை காா் பதிவு எண், ஓட்டுநா் பெயா், செல்லிடப்பேசி எண், எத்தனை நபா்கள் பயணிக்கின்றனா் என்ற விவரத்தை இ-பதிவு செய்து பயணிக்கலாம்.

தவிர வாகன பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை செயல்பட்டன. எலக்ட்ரிஷியன், பிளம்பா், மோட்டாா் இயந்திரம் பழுது நீக்குவோா், வேளாண் உபகரணங்கள், பம்ப்செட் பழுது நீக்க மையங்கள் ஆகியவை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை செயல்பட்டன. ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் 25 சதவீத பணியாளா்களுடன் செயல்படத் துவங்கின.

இருப்பினும் போலீஸாா் வாகனத் தணிக்கை செய்து காரணம் இல்லாமல் வெளியில் வந்தவா்களுக்கு அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com