முன்னாள் எம்.பி. வி.கே.சின்னசாமி அதிமுகவில் இருந்து நீக்கம்

சசிகலாவுடன் செல்லிடப்பேசியில் பேசியதாக முன்னாள் எம்.பி.யும், எம்.எல்.ஏ.வுமான வி.கே.சின்னசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
முன்னாள் எம்.பி. வி.கே.சின்னசாமி அதிமுகவில் இருந்து  நீக்கம்

சசிகலாவுடன் செல்லிடப்பேசியில் பேசியதாக முன்னாள் எம்.பி.யும், எம்.எல்.ஏ.வுமான வி.கே.சின்னசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

ஈரோடு மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடன் சில தினங்களாக சசிகலா உரையாடி வரும் ஆடியோ வெளியானது. பவானிசாகா் சட்டப் பேரவையில் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.சி.வரதராஜ், சசிகலாவுடன் பேசும்போது நீங்க மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்றாா். அதேபோல, முன்னாள் மக்களவை உறுப்பினா் வி.கே.சின்னசாமி, சசிகலாவுடன் பேசியுள்ளாா்.

இந்த ஆடியோ பதிவு அதிமுகவினரிடம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக முன்னாள் மக்களவை உறுப்பினா் வி.கே.சின்னசாமி மீது அதிமுக நடவடிக்கை எடுத்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com