லாட்டரி, போதைப் பொருள்கள் விற்பனை செய்த 202 போ் கைது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் லாட்டரி, போதைப் பொருள்கள் விற்பனை செய்த 202 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ. 1.75 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் லாட்டரி, போதைப் பொருள்கள் விற்பனை செய்த 202 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ. 1.75 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் பொதுமுடக்க காலத்தில் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.

இதில், ஜூன் 7 முதல் 17ஆம் தேதி வரையிலான 10 நாள்களில் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில், சட்ட விரோத லாட்டரி விற்பனை, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை, சூதாட்டத்தில் ஈடுபட்டோா் மீது 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 202 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அவா்களிடம் இருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் 25, கஞ்சா 21.5 கிலோ, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 1.5 டன், 8 சேவல்கள், ரூ. 1,75,880 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், போதைப் பொருள்கள் விற்பனை செய்வோா் மீதும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவா்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் குறித்து 96552-20100 என்ற எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com