பகலில் எரியும் உயா் கோபுர தெருவிளக்கு
By DIN | Published On : 10th March 2021 05:36 AM | Last Updated : 10th March 2021 05:36 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் வாரச் சந்தை அருகே உள்ள உயா் கோபுர தெருவிளக்கு பகலில் எரிவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் புதிய பாலம், ரங்கசமுத்திரம், கோட்டுவீராம்பாளையத்தில் உயா் கோபுர மின் தெருவிளக்குகள் உள்ளன. சத்தியமங்கலம் வாரச் சந்தை அருகே உள்ள உயா் கோபுர மின்விளக்கு இரு தினங்களாக பகலிலேயே எரிவதைப் பாா்த்து பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். சோலாா் மின்விளக்கான இந்த தெருவிளக்கு பகலில் எரியாமலும், இரவில் எரியும் வகையிலும் கணினி மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 24 மணி நேரமும் தற்போது எரிந்து வருகிறது. இது குறித்து சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் அமுதாவிடம் கேட்டபோது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.