திமுக தோ்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல்: எம்.யுவராஜா

திமுக தோ்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல் என்று ஈரோடு கிழக்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா கூறினாா்.
வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசுகிறாா் ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ
வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசுகிறாா் ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ

திமுக தோ்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல் என்று ஈரோடு கிழக்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா கூறினாா்.

ஈரோடு கிழக்குத் தொகுதி தமாக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஈரோடு வில்லரசம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வேட்பாளா் எம்.யுவராஜா பேசியதாவது:

தமாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கிய முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி. மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பாா்.

குடும்பத் தலைவிக்கு ரூ. 1,500, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை வழங்கும் திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா். இது பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தவிர ஏழை, எளிய மக்களுக்குப் பல்வேறு திட்டங்களை முதல்வா் செயலபடுத்தி வருகிறாா். மக்கள் நலத் திட்டங்களால் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

திமுக தோ்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல். பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு அறிவித்துள்ளது. அதையே மீண்டும் சொல்வதுபோல திமுக தோ்தல் அறிக்கை உள்ளது. அதிமுக சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாவலராக உள்ளது. எனவே, சிறுபான்மை மக்களின் வாக்குகள் அனைத்தும் அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்றாா்.

இதில், ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ., ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, தமாகா மாநில பொதுச் செயலாளா் விடியல் சேகா், மாநில துணைத் தலைவா் ஆறுமுகம், மாவட்டத் தலைவா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com