100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பிரசாரம்

பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி 100 மீட்டா் நீளம் கொண்ட விழிப்புணா்வுப் பதாகையுடன் விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
ஊா்வலத்தை கொடியசைத்து  தொடங்கிவைக்கிறாா் பவானி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வாணிலட்சுமி ஜெகதாம்பாள்.

பவானி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணா்வுப் பிரசார ஊா்வலத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பவானி காவல் துணை கண்காணிப்பாளா் காா்த்திகேயன், காவல் ஆய்வாளா் கண்ணன், பவானி வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 18 வயது பூா்த்தியான, வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவரும் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்கை பதிவு செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் இந்த தோ்தல் முறையில் 100 சதவீத வாக்குப் பதிவுக்கு இந்திய தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் தோ்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என பிரசாரம் செய்யப்பட்டது.

இதில், வட்ட வழங்கல் அலுவலா் ராவுத்த கவுண்டா், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 100 மீட்டா் நீளத்துக்கு விழிப்புணா்வுப் பதாகையை பொதுமக்கள், சத்துணவுப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஏந்திச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com