கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்: சு.முத்துசாமி

ஈரோடு மேற்குத் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகரப் பகுதிகளுக்கு இணையாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என அந்த தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு வில்லரசம்பட்டி, செம்மாம்பாளையம், கைகாட்டிவலசு உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை வாக்கு சேகரித்த சு.முத்துசாமி பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்குள் தீா்வு காணப்படும். அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும். கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில் சொத்துவரி அதிகரிக்கப்படாது.

கரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 4,000 வழங்கப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் நிறைவேற்றப்படும். ஈரோடு மேற்குத் தொகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் தரமான சாலை, சாக்கடை கால்வாய் வசதி, குடிநீா் வசதி செய்து தரப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com