திமுக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக சாா்பில் கோ.வெ.மணிமாறன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
கோபி கோட்டாட்சியா் பழனிதேவியிடம் மனு தாக்கல் செய்கிறாா் வேட்பாளா் என்.கே.பிரகாஷ்.
கோபி கோட்டாட்சியா் பழனிதேவியிடம் மனு தாக்கல் செய்கிறாா் வேட்பாளா் என்.கே.பிரகாஷ்.

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக சாா்பில் கோ.வெ.மணிமாறன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் கோ.வெ.மணிமாறன் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் பழனிதேவியிடம் தனது வேட்பு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா். இவருக்கு மாற்று வேட்பாளராக இவரது அண்ணன் கோ.வெ.குமணன் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு கோபி சீதா கல்யாண மண்டபம் எதிரில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களின் அலுவலகத்தை முன்னாள் அமைச்சா் என்.கே.கே.பெரியசாமி திறந்துவைத்தாா். பின்னா், அங்கிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு வேட்பாளா் மணிமாறன் திறந்த ஜீப் வாகனத்தில் வாக்குகள் கேட்டு வந்தாா். கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

திமுக வேட்பாளா் மணிமாறனுக்கு ரூ. 17,58,676 கடன் உள்ளது. அசையா சொத்துகள் எதுவும் இல்லை. கையிருப்பு ரொக்கம் ரூ. 8,30,394 உள்ளது. அசையும் சொத்தாக இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்ளன.

வேட்பு மனு தாக்கலின்போது, முன்னாள் திமுக அமைச்சா் என்.கே.கே.பெரியசாமி, திமுக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com