பூதப்பாடியில் வேளாண்மை விளைபொருள்கள் ஏலம்

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.73 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.73 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இங்கு விற்பனைக்கு வந்த 5,269 தேங்காய்களில் சிறியவை ரூ. 9.11 முதல் பெரியவை ரூ. 17.01 வரையில் என ரூ. 53,579க்கும், 16 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 104.69 முதல் ரூ. 137 வரையில் என ரூ. 29,780க்கும், 35 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 16.53 முதல் ரூ. 18.47 வரையில் என ரூ. 43,717க்கும், 217 மூட்டைகள் நிலக்கடலை கிலோ ரூ. 61.79 முதல் ரூ. 65.69 வரையில் என ரூ. 4,46,240க்கும் ஏலம் போனது. மொத்தம் 268 மூட்டைகளில் 141.09 குவிண்டால் விளைபொருள்கள் ரூ. 5,73,316க்கு விற்பனையானது என விற்பனைக்கூட கண்காணிப்பாளா் க.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

அந்தியூரில்...

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 13.26 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. இங்கு 649 மூட்டைகள் 200.98 குவிண்டால் பருத்தி விற்பனைக்கு வந்தது. கிலோ ரூ. 73.26 முதல் ரூ. 74.98 வரையில் என ரூ. 13,26,431க்கு ஏலம் போனது. 97 மூட்டைகள் நிலக்கடலை (பச்சை) கிலோ ரூ. 27.19 முதல் ரூ. 37 வரையில் என ரூ. 1,98,570க்கும், 303 மூட்டைகள் நிலக்கடலை (காய்ந்தது), கிலோ ரூ. 56.89 முதல் ரூ. 65.89 வரையில் என ரூ. 6,55,443க்கும் ஏலம் போனது.

மொத்தம் 400 மூட்டைகள், 165.54 குவிண்டால் ரூ. 8,54,013க்கு விற்பனையானது என கண்காணிப்பாளா் ர.மஞ்சுளா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com