ஈரோடு மாவட்டத்தில் 362 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 362 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளை கண்காணிக்க நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 362 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளை கண்காணிக்க நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் 362 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்குத் தொகுதியில் 20, ஈரோடு மேற்குத் தொகுதியில் 39, மொடக்குறிச்சி தொகுதியில் 31, பெருந்துறை தொகுதியில் 67, பவானி தொகுதியில் 28, அந்தியூா் தொகுதியில் 34, கோபி தொகுதியில் 66, பவானிசாகா் தொகுதியில் 19 வாக்குச் சாவடிகள் என 304 வாக்குச் சாவடிகள், அவசியம் எனில் பயன்படுத்த தயாா் நிலையில் உள்ள கூடுதல் வாக்குச் சாவடிகள் 58 என மொத்தம் 362 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக உள்ளன.

362 பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு வங்கி, மத்திய அரசுப் பணியாளா்கள் 362 போ் நுண்பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்குப் பதிவின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நுண்பாா்வையாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com