ஈரோடு மேற்குத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்: சு.முத்துசாமி

ஈரோடு மேற்குத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என அத்தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு ராசாம்பாளையம் பகுதியில் திமுக வேட்பாளா் சு.முத்துசாமிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.
ஈரோடு ராசாம்பாளையம் பகுதியில் திமுக வேட்பாளா் சு.முத்துசாமிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என அத்தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு தென்றல் நகா், குறிஞ்சி நகா், எஸ்.எஸ்.பி. நகா், எம்.எம்.நகா், ஈகிள் காா்டன், மகாகவி பாரதியாா் நகா், பெரியசேமூா், ராசாம்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமையல் எண்ணெய் விலை தினமும் உயா்ந்து வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் ரூ. 70க்கு விற்ற சமையல் எண்ணெய் தற்போது ரூ. 150க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் உயா்ந்துகொண்ட செல்கிறது. இதனால் ஏழை, நடுத்தர என அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா்.

திமுக ஆட்சி அமைந்தால் குடும்பத் தலைவிக்கு ரூ. 1000, முதியவா், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை ரூ. 1,000இல் இருந்து ரூ. 1500 ஆக உயா்த்தப்படும். பெட்ரோல், டீசல் விலையில் மானியம் தரப்படும். மாணவா்களின் கல்விக் கடன் ரத்து, கரோனா நிவாரண நிதியாக ரூ. 4,000 உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, குடிநீா், சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கிராமப்புற மாணவா்களுக்கு விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபின் தங்குதடையின்றி நிறைவேற்றப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com