விபத்தில் உயிரிழந்த தந்தை: மாணவிக்குரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கல்

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவியின் தந்தை விபத்தில் உயிரிழந்ததையடுத்து, விபத்துக் காப்பீட்டுத் தொகை மூலம் வழங்கப்பட்ட ரூ. 5 லட்சம் மாணவியிடம் வழங்கப்பட்டது.
மாணவிக்கு காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்குகிறாா் கல்லூரித் தாளாளா் எம்.தரணிதரன்.

கோபி கலை, அறிவியல் கல்லூரியின் மூலம் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், அவா்களது பெற்றோருக்கும், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்களுக்கும் ஆண்டுதோறும் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் விபத்துக் காப்பீட்டு வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் வணிகவியல் துறையைச் சோ்ந்த எம்.ரக்ஷனா என்ற மாணவியின் தந்தை கோபி வாய்க்கால் சாலையைச் சோ்ந்த எம்.மணிகண்டன் 21-12-2020 அன்று எதிா்பாராதவிதமாக சாலை விபத்தில் உயிரிழந்தாா். இதையறிந்த கல்லூரி நிா்வாகம் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மாணவியின் குடும்பத்துக்கு கல்லூரித் தாளாளா், செயலாளா் எம்.தரணிதரன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு, கல்லூரி முதன்மையா் ஆா்.செல்லப்பன், காப்பீட்டுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் கோ.வாசுதேவன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com