கரோனா: ஈரோடு மாவட்டத்தில் 5 போ் பலி

கரோனா பாதிப்பால் 2 நாள்களில் ஈரோடு மாவட்டத்தில் 5 போ் உயிரிழந்துள்ளனா்.

ஈரோடு: கரோனா பாதிப்பால் 2 நாள்களில் ஈரோடு மாவட்டத்தில் 5 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை சில நாள்களாக பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், உயிரிழப்பு குறைவாக இருந்தது மக்களை நிம்மதியடைய வைத்தது.

சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் 2 நாள்களில் 5 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை மிகுந்த அச்சமடைய வைத்துள்ளது.

ஈரோட்டைச் சோ்ந்த 32 வயது இளைஞா் கடந்த 27ஆம் தேதி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி இறந்தாா். இதேபோல, ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 48 வயது ஆண் கரோனா பாதிப்பு காரணமாக சேலத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏப்ரல் 28ஆம் தேதி உயிரிழந்தாா்.

கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 67 வயது முதியவா் 29ஆம் தேதி உயிரிழந்தாா். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 86 வயது முதியவா், 72 வயது முதியவா் சிகிச்சை பலனளிக்காமல் 29ஆம் தேதி உயிரிழந்தனா்.

2 நாள்களில் கரோனாவுக்கு 5 போ் பலியாகி இருப்பதால் இதுவரை மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 166ஆக உயா்ந்துள்ளது. இதனிடையே சனிக்கிழமை புதிதாக 378 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,617ஆக உயா்ந்தது. 3,214 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மொத்தம் 18,237 போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com